பறக்கும் பாலப்பணியின் போது கிரேன் கம்பி அறுந்து விழுந்தது; 2 பேர் காயம்
மதுரை-திருப்பாலை இடையே பறக்கும் பாலப்பணியின் போது கிரேன் கம்பி அறுந்து விழுந்தது. இதில் 2 பேர் காயம் அடைந்தனர்.
மதுரை,
மதுரை-திருப்பாலை இடையே பறக்கும் பாலப்பணியின் போது கிரேன் கம்பி அறுந்து விழுந்தது. இதில் 2 பேர் காயம் அடைந்தனர்.
4 வழிச்சாலை பணி
மதுரை-நத்தம் இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை தல்லாகுளத்தில் இருந்து திருப்பாலை இடையே கூடுதலாக பறக்கும் பாலம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு இந்த பறக்கும் பாலப்பணியின்போது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி உயிரிழந்தார். மேம்பாலம் இடிந்தது தொடர்பாக ஆய்வு செய்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கட்டுமான பணி மேற்கொண்ட ஒப்பந்த நிறுவனத்திற்கு ரூ.3 கோடியும், கட்டுமான ஆலோசனை நிறுவனத்திற்கு ரூ.40 லட்சம் அபராதமும் விதித்தது.
கிரேன் கம்பி அறுந்து விழுந்தது
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த பாலத்தில் பணிகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கிரேன் கம்பி அறுந்து விழுந்தது. கட்டுமானத்தில் இருந்த கற்கள் பெயர்ந்து விழுந்தன. இதில் அப்பகுதியில் சென்று கொண்டிருந்த விஷ்வா (வயது 39), கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர் பாஸ்கரன் (45) ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள், ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பறக்கும் பாலத்தில் 2-வது முறையாக விபத்து நடந்தது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story