சேலம் மாவட்டத்தில் மே தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 93 நிறுவனங்கள் மீது வழக்கு-அதிகாரிகள் நடவடிக்கை
சேலம் மாவட்டத்தில் மே தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 93 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் தொழிலாளர் தினமான நேற்று தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்ய தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டார். அதன்பேரில், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் மஞ்சள் நாதன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் நேற்று சேலம், ஆத்தூர், மேட்டூர், வாழப்பாடி, ஓமலூர் உள்பட மாவட்டம் முழுவதும் 144 தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில் அதிரடியாக ஆய்வு செய்தனர். அப்போது, அரசு உத்தரவை மீறி மே தினத்தன்று தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்காமல் 25 கடைகளும், 68 வணிக நிறுவனங்களும் செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மொத்தம் 93 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story