ஈரோட்டில் மின்சாரம் தாக்கி மயில் சாவு


ஈரோட்டில் மின்சாரம் தாக்கி மயில் சாவு
x
தினத்தந்தி 2 May 2022 4:36 AM IST (Updated: 2 May 2022 4:36 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் மின்சாரம் தாக்கி மயில் இறந்தது.

ஈரோடு
ஈரோடு சாஸ்திரி நகர் பகவதி அம்மன் கோவில் அருகே நேற்று காலை ரோட்டில் மயில் ஒன்று இறந்து கிடந்தது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு சூரம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இறந்து போன மயில் அந்த வழியாக பறந்து வரும்போது, மின் கம்பியில் மோதி மின்சாரம் தாக்கி இறந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இறந்த அந்த மயில் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பிறகு வனத்துறையினர் உரிய முறைப்படி அடக்கம் செய்தனர்.

Next Story