ஈரோட்டில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் மே தின ஊர்வலம்


ஈரோட்டில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் மே தின ஊர்வலம்
x
தினத்தந்தி 2 May 2022 4:39 AM IST (Updated: 2 May 2022 4:39 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் மே தின ஊர்வலம் நடத்தினர்.

ஈரோடு
ஈரோட்டில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் மே தின ஊர்வலம் நடத்தினர்.
மே தின ஊர்வலம்
தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை சார்பில் மே தின ஊர்வலம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. ஊர்வலத்துக்கு சங்க செயலாளர் கோபால் தலைமை தாங்கினார். பொருளாளர் தங்கமுத்து, துணைச்செயலாளர் ரவிசந்திரன், டாஸ்மாக் பணியாளர்கள் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்துகொண்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
ஈரோடு வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் சுவஸ்திக் கார்னர், மேட்டூர்ரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா, மீனாட்சி சுந்தரனார் சாலை வழியாக பன்னீர்செல்வம் பூங்காவில் நிறைவடைந்தது. இதில் தொழிற்சங்கத்தினர் பலர் கலந்துகொண்டு ஊர்வலமாக நடந்து சென்றனர்.
பொதுக்கூட்டம்
இதேபோல் ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு. சார்பில் மே தின ஊர்வலம் ஈரோட்டில் நேற்று நடந்தது. ஊர்வலத்துக்கு ஏ.ஐ.டி.யு.சி. சுமை தூக்கும் தொழிலாளர் சங்க தலைவர் எஸ்.டி.பிரபாகரன் தலைமை தாங்கினார். ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானாவில் இருந்து தொடங்கிய ஊர்வலம் மேட்டூர்ரோடு, சுவஸ்திக் கார்னர், சத்திரோடு வழியாக சென்று வீரப்பன்சத்திரத்தில் நிறைவடைந்தது. தொடர்ந்து வீரப்பன்சத்திரத்தில் பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம், ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் எஸ்.சின்னசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story