விடுமுறை அளிக்காத 88 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
விடுமுறை அளிக்காத 88 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி:
சென்னை தொழிலாளர் ஆணையா் மற்றும் முதன்மை செயலாளர் அதுல் ஆனந்த், திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர் ஜெயபாலன் மற்றும் தொழிலாளர் இணை ஆணையர் கோவிந்தன் ஆகியோரது அறிவுரையின் படி திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தங்கராசு தலைமையில் தொழிலாளர் துணை மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் தேசிய விடுமுறை நாளான மே தினத்தில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 137 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டதில், தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்காத 88 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு அவற்றின் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் இனிவரும் தேசிய பண்டிகை விடுமுறை நாட்களில் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்படும். தேசிய விடுமுறை நாட்களில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமல் பணிபுரிய நிர்ப்பந்திக்கும் வர்த்தக நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவழக்கை எடுக்கப்படும். மேற்கண்ட தகவலை திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தங்கராசு தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story