சாலை வசதி கேட்டு கிராம சபை கூட்டத்தில் மனு அளித்த மாணவர்கள்
சாலை வசதி கேட்டு கிராம சபை கூட்டத்தில் மாணவர்கள் மனு அளித்தனர்.
துவரங்குறிச்சி:
தமிழகம் முழுவதும் நேற்று ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதேபோல் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ள காரைப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், காரைப்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 7-ம் படிக்கும் மாணவர்களான ஸ்ரீபதி, மாதவன் ஆகிேயார் ஒரு மனு அளித்தனர். அதில் வடகாடுபட்டியில் இருந்து செவல்பட்டி மேலூருக்கு செல்லும் சாலை மற்றும் துவரங்குறிச்சி செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதால், புதிய சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும், என்று கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story