கள்ளக்காதலை கண்டித்த கணவன் மீது வெந்நீரை ஊற்றிய மனைவி
கள்ளக்காதலை கண்டித்த கணவன் மீது மனைவி வெந்நீர் ஊற்றினார்.
சமயபுரம்:
சமயபுரம் அருகே உள்ள நரசிங்கமங்கலம் அரிசன தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்(வயது 45). இவருக்கு திருமணமாகி சுதா(36) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். சுதா திருச்சி தில்லைநகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாகவும், வேலை பார்க்கும் இடத்தில் பாலசுப்பிரமணியன் என்பவருடன் அவருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதை அறிந்த கார்த்திகேயன், சுதாவை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தூங்கிக் கொண்டிருந்த கார்த்திகேயன் மீது வெந்நீரை எடுத்து சுதா ஊற்றி உள்ளார். இதனால் அலறி துடித்த கார்த்திகேயனை அக்கம், பக்கத்தினர் மீட்டு மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கார்த்திகேயன் சமயபுரம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதா, பாலசுப்பிரமணியன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story