புனித உபகார அன்னை ஆலய தேர்பவனி


புனித உபகார அன்னை ஆலய தேர்பவனி
x
தினத்தந்தி 2 May 2022 5:28 AM IST (Updated: 2 May 2022 5:28 AM IST)
t-max-icont-min-icon

புனித உபகார அன்னை ஆலய தேர்பவனி நடந்தது.

மணிகண்டம்:
மணிகண்டம் அருகே அளுந்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட யாகப்புடையான்பட்டியில் உள்ள புனித உபகார அன்னை ஆலயத்தில் திருவிழா கடந்த மாதம் 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றில் இருந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு பங்குத்தந்தைகள் கலந்து கொண்டு மறையுரை மற்றும் திருப்பலி நிறைவேற்றினர். விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதையொட்டி முன்னதாக நாகமங்கலம் பங்குத்தந்தை ஜெயராஜ், ஆவூர் பங்குத்தந்தை டேவிட்ராஜ், நாங்குநேரி அருட்தந்தை அற்புத ஜோசப்குமார் ஆகியோர் கலந்து கொண்டு திருவிழாவையொட்டி சிறப்பு கூட்டுத்திருப்பலி நிறைவேற்றினர்.
இதைத்தொடர்ந்து நள்ளிரவில் வண்ண மலர் தோரணங்கள் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 3 தேர்கள் பவனி வந்தன. இதில் முதலாவது தேரில் ஏசு, இரண்டாவது தேரில் சூசையப்பர், மூன்றாவது தேரில் புனித உபகார அன்னை ஆகிய சொரூபங்கள் வைக்கப்பட்டிருந்தன. இதைத்தொடர்ந்து நேற்று காலை பங்குத்தந்தை ஜெயராஜ் கலந்து கொண்டு திருவிழா நிறைவு திருப்பலியாற்றினார். நேற்று மாலை ஆலயத்தின் முன்பு கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பணியில் மணிகண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், மாரிமுத்து உள்ளிட்ட போலீசார் ஈடுபட்டனர்.

Next Story