வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு


வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
x
தினத்தந்தி 2 May 2022 4:45 PM IST (Updated: 2 May 2022 4:45 PM IST)
t-max-icont-min-icon

வடசென்னை அனல்மின் நிலையத்தில் முதல் யூனிட் முதல் அலகில் கொதிகலன் குழாயில் கசிவு ஏற்பட்டதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

வடசென்னை அனல்மின் நிலையத்தில் முதல் யூனிட்டில் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும், 2-வது யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600 வீதம் 1,200 மெகாவாட்டும் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தநிலையில் முதல் யூனிட் முதல் அலகில் கொதிகலன் குழாயில் கசிவு ஏற்பட்டதால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அதனை சீரமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story