106 டிகிரி வெயில் கொளுத்தியது
திருவண்ணாமலையில் 106 டிகிரி வெயில் கொளுத்தியது
திருவண்ணாமலை
கோடை காலம் தொடங்கி உள்ளதால் கடந்த சில தினங்களாக திருவண்ணாமலையில் வெயில் கொளுத்தி வருகிறது.
அக்னி ஸ்தலம் என்பதற்கு ஏற்ப திருவண்ணாமலை வெயிலின் காரணத்தால் அனலாய் கொதிக்கிறது. கடந்த 30-ந் தேதி 105 டிகிரியாக பதிவாகி இருந்த வெயில் நேற்று 104 டிகிரியாக குறைந்தது.
ஆனால் திருவண்ணாமலையில் இன்று பகலில் வெயில் சுட்டெரித்தது. இதனால் திருவண்ணாமலையில் 106 டிகிரியாக வெயில் அளவு பாதிவானது. இதுவே இந்த ஆண்டிற்கான அதிகபட்ச வெயில் அளவாகும்.
வெயிலின் தாக்கத்தால் சாலையில் மக்கள் நடமாட முடியாமல் அவதிப்பட்டனர். பெரும்பாலானோர் கையில் குடையுடனும், முகத்தை துணியால் மூடியபடியும் சென்றனர். மேலும் சிலர் குளிர்பான கடைகளில் தஞ்சம் அடைந்தனர்.
வீடுகளில் பகல் மட்டுமின்றி இரவிலும் மின்விசிறியில் இருந்து அனல் காற்று வீசியது. இதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை மிகவும் அவதி அடைந்தனர். இரவில் தூக்கமின்றி பலர் தவித்தனர்.
Related Tags :
Next Story