ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் பேரணி
ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் பேரணி
ஊட்டி
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் ஊட்டி ஏ.டி.சி. பஸ் நிலையத்தில் பேரணி நடைபெற்றது. இதற்கு மாவட்ட பொதுச்செயலாளர் சையது இப்ராகீம் தலைமை தாங்கினார். பேரணியானது மத்திய பஸ் நிலையத்தில் நிறைவு பெற்றது. பின்னர் நடைபெற்ற கூட்டத்தில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும்,
மத கலவரங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை கைவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Related Tags :
Next Story