அரசு அலுவலகங்களில் மின்னணு செயல்பாடு
நீலகிரி மாவட்டஅரசு அலுவலகங்களில் மின்னணு செயல்பாடு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்
ஊட்டி
நீலகிரி மாவட்டஅரசு அலுவலகங்களில் மின்னணு செயல்பாடு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்.
மின்னணு செயல்பாடு
தமிழகத்தில் உள்ள அனைத்து துறை அரசு அலுவலகங்களிலும் காகிதங்களின் பயன்பாடு அதிகளவில் உள்ளது. இதற்காகவே குறிப்பிட்ட தொகையை செலவிட வேண்டியது உள்ளது. இந்த செலவை குறைக்கும் வகையில் அனைத்து துறைகளிலும் காகித பயன்பாட்டை குறைத்து கணினி மூலம் கடிதம், ஆவணங்களை அனுப்பும் ‘இ-கவர்னன்ஸ்’ திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.
அதன்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் மின்னணுமுறை செயல்பாட்டை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்களிடம், கலெக்டர் கூறியதாவது:-
முதல் மாவட்டம்
தமிழகத்திலேயே முதல் மாவட்டமாக நீலகிரியில் கலெக்டரின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் துறைகள் அனைத்திலும் மின்னணு முறை இன்று முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.முதற்கட்டமாக, மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமைமற்றும் கனிமவளம் உள்ளிட்ட துறைகளில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.
அடுத்தகட்டமாக தாசில்தார் அலுவலகங்களில் கொண்டு வரப்பட உள்ளது. இதற்கு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார்.இவ்வாறு அவர் கூறினார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தனப்பிரியா மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story