தொழிலாளர் தின விழா
தொழிலாளர் தின விழா
கூடலூர்
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் தொழிலாளர் தின விழா, கூடலூர் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். செயலாளர் மாதவன் வரவேற்றார். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க மாநில தலைவர் சண்முகராஜா கலந்துகொண்டு சங்க கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து கல்வெட்டை திறந்து வைத்தார்.
பின்னர் மாநில செயலாளர் சிவானந்தன், மாவட்ட தலைவர் விஜயகுமார், செயலாளர் குமார், பொருளாளர் விஜயகுமார் மற்றும் பலர் பேசினர். இதையடுத்து மாநில தலைவர் சண்முகராஜா கூறும்போது, தற்போது மாநிலம் முழுவதும் 7,500 சாலை பணியாளர் காலிப்பணியிடங்கள் உள்ளது. இதை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story