பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் மையங்கள் அதிகரிப்பு


பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் மையங்கள் அதிகரிப்பு
x
தினத்தந்தி 2 May 2022 8:03 PM IST (Updated: 2 May 2022 8:03 PM IST)
t-max-icont-min-icon

சென்னை ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது.

கூடலூர்

சென்னை ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது.

சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

நீலகிரி மாவட்டம் சிறந்த கோடை வாசஸ்தலமாக உள்ளதால், தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் கொண்டு வரும் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு கழிவுகளாக வனப்பகுதி மற்றும் திறந்தவெளியில் கொட்டப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு அடைகிறது. 

மேலும் வனவிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு வனப்பகுதி மற்றும் திறந்தவெளியில் காலி மதுபாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சேகரிப்பு மையங்கள்

இதன் ஒரு பகுதியாக ஊட்டி தலைக்குந்தா பஸ் நிலையம், கோத்தகிரி டானிங்டன், கட்டபெட்டு சந்திப்பு, குன்னூர் பஸ் நிலையம் ஆகிய பகுதியில் காலி மதுபாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டது.

இந்த நியைில் 2-வது கட்டமாக பைக்காரா பஸ் நிலையம், குந்தா, பிக்கட்டி பஜார், குன்னூர் வண்டிச்சோலை, பந்தலூர் தாலுகா சோதனைச்சாவடி, கூடலூர் சில்வர் கிளவுட் பகுதியில் மையங்கள் திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் நீலகிரியில் சேகரிப்பு மையங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. 

ஆய்வு

கூடலூர் சில்வர் கிளவுட் மையத்தில் நகராட்சி ஆணையாளர் ராஜேஷ்வரன், சுகாதார ஆய்வாளர் சரவணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வரத்து அதிகமாக உள்ளதால், பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வர அனுமதிக்கக்கூடாது என்று ஊழியர்களிடம் கண்டிப்புடன் கூறினர். 

மேலும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அரசின் உத்தரவை பின்பற்றி சுற்றுச்சூழலை பாதுகாக்க காலி மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகளை வனப்பகுதி மற்றும் திறந்தவெளியில் கொட்டாமல் சேகரிப்பு மையத்தில் வழங்கி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து உள்ளனர்.


Next Story