மின் ஊழியர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்


மின் ஊழியர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 May 2022 8:17 PM IST (Updated: 2 May 2022 8:17 PM IST)
t-max-icont-min-icon

மின் ஊழியர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சார்பில் திருப்பத்தூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட திட்ட அலுவலர் ஞானசேகரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மண்டல துணை செயலாளர் சி.ரங்கநாதன் வரவேற்றார். பொருளாளர் கிருஷ்ணகுமார், கோட்ட தலைவர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் குடியாத்தம் பாக்கம் பிரிவில் மின்தடையை சரிசெய்ய சென்றிருந்த பொறியாளர் மற்றும் பணியாளர்களை தாக்கிய நபர்களை உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும், மின்சார அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தகுந்த பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. சமரசம், குட்டிபையன், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story