எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது இந்திய கடற்படையினர் அதிரடி
நாகை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேரை இந்திய கடற்படையினர் கைது செய்தனர்.
காரைக்கால்
நாகை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேரை இந்திய கடற்படையினர் கைது செய்தனர்.
இலங்கை மீனவர்கள்
நாகை மாவட்டம் கோடியக்கரை கடல் பகுதியில் இந்திய கடற்படையினர் நேற்று முன்தினம் கப்பலில் ரோந்து சென்றனர். அப்போது கோடியக்கரைக்கு அருகே வெள்ளபள்ளம்- நாலுவேதபதிக்கு இடையே இலங்கையை சேர்ந்த ஒரு விசைப்படகு நிற்பது கடற்படையினருக்கு தெரியவந்தது.
உடனே அவர்கள் ரோந்து கப்பலில் சென்று அந்த விசைப்படகை பார்த்தபோது அதில் இலங்கையை சேர்ந்த 6 மீனவர்கள் இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், எல்லை தாண்டி இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்தது தெரியவந்தது.
இதையடுத்து மீனவர்கள் 6 பேரையும், இந்திய கடற்படையினர் கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய விசைப் படகையும் பறிமுதல் செய்து காரைக்கால் தனியார் துறைமுகத்தில் உள்ள நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
6 பேர் கைது
தொடர்ந்து நடத்திய விசாரணையில், கைதான மீனவர்கள் இலங்கை திரிகோணமலையை சேர்ந்த மதுஷா, அமிலா மசங்கா, சுஜித் பண்டாரா, புதிகா, உஷன் மதுசன், துங்கா மகேலா ஆகியோர் என்பதும், அனுரா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 21-ந் தேதி திரிகோணமலையில் இருந்து மீன்பிடிக்க வந்தபோது, காற்றின் வேகத்தில் எல்லை தாண்டி இந்திய கடல் பகுதிக்கு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, இலங்கை மீனவர்கள் 6 பேர் மீதும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story