பூண்டி அணை குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
பூண்டி அணை குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணிக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மேற்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் பூண்டி அணை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து சதுரங்கபேட்டை வரை சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்த சைக்கிள் பேரணிக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி தொடங்கி வைத்து சைக்கிளில் பயணம் மேற்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது கலெக்டர் சைக்கிளில் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து சதுரங்கப்பேட்டை வரை 10 கிலோமீட்டர் வரை சைக்கிளில் சென்று விழிப்புணர்வு மேற்கொண்டார்.
இந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில் மாவட்ட சுற்றுலா அலுவலர் சிவக்குமார், பூண்டி நீர்த்தேக்க உதவி பொறியாளர் ரமேஷ், திருவள்ளூர் சைக்கிள் கிளப் நிர்வாகிகள் லோகேஷ் ராஜா, ராகுல் சர்மா மற்றும் திரளான பொதுமக்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story