கெங்கையம்மன் கோவில் திருவிழா கடைகளை இ-டெண்டர் மூலம் ஏலம் விடக்கூடாது
குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழா கடைகளை இ-டெண்டர் மூலம் ஏலம் விடக்கூடாது என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
வேலூர்
குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழா கடைகளை இ-டெண்டர் மூலம் ஏலம் விடக்கூடாது என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
குறைதீர்வு நாள் கூட்டம்
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்கள் குறைகள், கோரிக்கைகளை மனுவாக எழுதி கலெக்டரிடம் வழங்கினர். முகாமில், முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா உள்ளிட்டவை தொடர்பாக 399 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டார்.
வீட்டுமனை பட்டா
கூட்டத்தில் காட்பாடி தாலுகா சேர்க்காடு அண்ணாநகரை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், இந்த பகுதியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக 16 குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகிறோம். கூலிதொழில் செய்து வரும் நாங்கள் வீட்டுமனை பட்டா வழங்கும்படி பல ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்து வருகிறோம். வீட்டிற்கு குடிநீர், மின்இணைப்பு பெற்று முறையாக வரி செலுத்தி உள்ளோம். ஆனால் இதுவரை எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவில்லை. இதுதொடர்பாக கலெக்டர் விசாரித்து வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்து முன்னணி வேலூர் கோட்ட தலைவர் மகேஷ் தலைமையிலான நிர்வாகிகள் உடுக்கை, பம்பை அடித்தபடி சிவன் வேடம் அணிந்தவருடன் குறைதீர்வு நாள் கூட்டத்துக்கு வந்தனர்.
அவர்கள் அளித்த மனுவில், சமூக வலைத்தளமான யூடியூப்பை கடந்த சில நாட்களுக்கு முன்பு பார்வையிட்டேன். அதில் ஒரு தளத்தில் நடராஜ பெருமாள் காலை தூக்கி நிற்கும் திருக்கோலம் குறித்து அவதூறாகவும், வக்கிரமாகவும் பதிவிடப்பட்டிருந்தது. இந்துக்களின் இறை நம்பிக்கை, வழிபாட்டை கொச்சைப்படுத்தியும், முகம் சுளிக்கும் வகையில் ஆபாசமாகவும் உள்ளது. நடராஜரின் நடன கோலத்தை வக்கிரமாக சித்தரித்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த யூடியூப் கணக்கை முடக்கி, அதற்கு உடந்தையான அனைவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
இ-டெண்டர் மூலம் ஏலம்
குடியாத்தம் கோபாலபுரம் நாட்டாண்மை சம்பத் தலைமையில் முன்னாள் மத்திய மந்திரி என்.டி.சண்முகம் மற்றும் ஊர்பொதுமக்கள் அளித்த மனுவில், குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோவில் திருவிழா வருகிற 15-ந் தேதி நடைபெற உள்ளது. கோவில் வருமானத்தில் வருமானம் கேட்டு குடியாத்தம் நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்கள். மேலும் திருவிழா கடைகளை இ-டெண்டர் மூலம் ஏலம் விடுவதாக அறிவித்துள்ளனர். இதனை ரத்து செய்து, பழைய முறைப்படி பொதுஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
குடியாத்தத்தை அடுத்த பூசாரிவலசை ஒண்டியூர் கிராமமக்கள், 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கும் தங்கள் பகுதியில் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைத்து தரும்படி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
கூட்டத்தில், நரிக்குறவர்களுக்கு நலவாரிய உறுப்பினர் அட்டைகளை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வழங்கினார்.
Related Tags :
Next Story