கோவில்பட்டி பத்திர காளியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா


கோவில்பட்டி பத்திர காளியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா
x
தினத்தந்தி 2 May 2022 9:01 PM IST (Updated: 2 May 2022 9:01 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது

கோவில்பட்டி:
கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியை யொட்டி கோவில் நடை 5.30 மணிக்கு திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தது.
காலை 8 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட யானை முன் செல்ல டி. பி. ஆர். மணி, ஜி.எம். கோபி குழுவினர் நாதஸ்வரம், பெரிய கொல்லப்பட்டி மாரியப்பன் வாங்கா இசை வாசிக்க நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஏ.பி.கே. பழனிச் செல்வம், கோவில் தர்மகத்தா எஸ்.எம். மாரியப்பன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள், மண்டகப்படி காரர்கள், பக்தர்கள், மஞ்சள் நீராட்டு இளைஞர்கள் மங்களப் பொருட்களுடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு வந்தனர். கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, தங்ககொடி மரத்தில் கொடியேற்றம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நாடார் உறவின் முறை சங்க துணைத்தலைவர் எம். செல்வராஜ், செயலாளர் எஸ்.ஆர். ஜெயபாலன், பொருளாளர் டி.ஆர்.சுரேஷ் குமார், உறுப்பினர்கள் கே. ராஜேந்திர பிரசாத், ஆர். ஜி. என். மாடசாமி, கே. மகேந்திரன், பிச்சைக்கனி, கோவில் செயலாளர் மாணிக்கம், உறுப்பினர்கள் ராஜேந்திரன், பாலமுருகன், திருப்பதி ராஜா, கோவில்பட்டி நகரசபை துணைத் தலைவர் ஆர்.எஸ். ரமேஷ், தொழிலதிபர்கள் ராஜவேல், கூடலிங்கம் ஆறுமுகச்சாமி, வி.எஸ்.எம். கண்ணன் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். நேற்று மாலையில் நாடார் தேங்காய், பழம், காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் சார்பில் இரவு 7 மணிக்கு பத்ரகாளியம்மன் துர்க்கை கோலத்தில் சூலாயுதம் ஏந்தி வீதி உலா நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாடார் உறவின்முறை சங்கம், பத்திர காளியம்மன் கோவில் நிர்வாக குழுவினர் செய்து வருகிறார்கள்.

Next Story