மீன்பிடி தடைக்காலத்தில் காரைக்கால் துறைமுகத்தை தூர்வார வேண்டும் அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை


மீன்பிடி தடைக்காலத்தில் காரைக்கால் துறைமுகத்தை தூர்வார வேண்டும் அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 2 May 2022 9:12 PM IST (Updated: 2 May 2022 9:12 PM IST)
t-max-icont-min-icon

மீன்பிடி தடைக்காலத்தில் காரைக்கால் துறைமுகத்தை தூர்வார அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காரைக்கால்
மீன்பிடி தடைக்காலத்தில் காரைக்கால் துறைமுகத்தை தூர்வார அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீன்பிடி தடைக்காலம்

ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை மீன்களின் இனப்பெருக்க காலமாகும். இந்த காலத்தில் மீன்களை பிடித்தால் அவற்றின் இனப்பெருக்கம் பாதிக்கப்படும் என்பதால், மத்திய-மாநில அரசு இந்த 61 நாட்களில் ஆழ்கடலில் மீன்பிடிக்க தடை விதித்துள்ளது. 
அதன்படி, காரைக்கால் மண்டபத்தூர் முதல் வடக்கு வாஞ்சூர் வரையிலான 11 மீனவ கிராமத்தில் உள்ள சுமார் 20 ஆயிரம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. பைபர் படகு மீனவர்கள் மட்டும் குறைந்த தூரம் கடலுக்குள் சென்று, சிறிய அளவிலான மீன்களை பிடித்து வருகின்றனர்.

பழுதுபார்க்கும் பணி

மீன்பிடி தடைக்காலத்தை பயனுள்ளதாக மாற்றிக்கொள்ளும் வகையில் மீனவர்கள் தங்கள் மீன்பிடி வலை, படகுகளை பழுதுபார்க்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். சில மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளை கரையில் ஏற்றி என்ஜினை பழுது பார்த்தும், பெயிண்ட் அடித்தும் வருகின்றனர்.
மீன்பிடி தடைகாலத்தில், கடலுக்கு செல்லாத மீனவர்கள் குடும்பத்திற்கு, புதுச்சேரி அரசு தலா ரூ.5,500 வழங்கி வருகிறது. விலைவாசி உயர்வை கருத்தில்கொண்டு இத்தொகையை இரு மடங்காக அதிகரித்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூர்வார வேண்டும்

மேலும் படகு பழுதுபார்ப்பு தொகையையும் இரட்டிப்பாக வழங்கவேண்டும், மீன்பிடி துறைமுகம், கடந்த பல ஆண்டுகளாக முழுமையாக தூர்வாராமல் இருப்பதால், இந்த மீன்பிடி தடைக்காலத்தை பயன்படுத்தி துறைமுகத்தை முழுமையாக தூர்வார வேண்டும். துறைமுகம் உள்ளே மீனவர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்துதரவேண்டும் என்று அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story