தட்டார்மடத்தில் புதிய இடத்தில் மூதாட்டி சடலத்தை புதைக்க ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு
தட்டார்மடத்தில் புதிய இடத்தில் மூதாட்டியின் சடலத்தை புதைக்க திங்கட்கிழமை ஒரு தப்பினர் எதிர்ப்பு தெரிவித்தால் பரபரப்பு ஏற்பட்டது.
சாத்தான்குளம்:
தட்டார்மடத்தில் புதிதாக வாங்கிய இடத்தில் இறந்த மூதாட்டியின் சடலத்தை புதைக்க நேற்று ஒரு தப்பினர் எதிர்ப்பு தெரிவித்தால் பரபரப்பு ஏற்பட்டது.
மூதாட்டி இறப்பு
சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடத்தில் ஆர். சி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர்கள் இறந்தால் ஆர்.சி. ஆலயத்துக்கு சொந்தமான சுடுகாட்டில் சடலம் புதைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த ஆலயம் விரிவாக்கம் பணி காரணமாக நிர்வாகம் சார்பில் அதே பகுதியில் கொம்மடிக்கோட்டை ஊராட்சியைச் சேர்ந்த பகுதியில் இடம் வாங்கப்பட்டுள்ளது.
சடலத்தை புதைக்க எதிர்ப்பு
ஆனால், அந்த புதிய இடத்தில் சடலத்தை புதைக்க கூடாது என அதே பகுதியை சேர்ந்த ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று தட்டார்மடம் ஆர்.சி தெருவில் மூதாட்டி ஒருவர் மரணமடைந்தார். இவரது சடலத்தை அந்த புதிய இடத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு கொம்மடிக்கோட்டையைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு ெதரிவித்து, அந்த பகுதியில் திரண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தட்டார்மடம் ஆர்.சி தெரு பகுதியை சேர்ந்தவர்கள்,மூதாட்டி சடலத்தை புதிய இடத்தில் தான் அடக்கம் செய்வோம் என திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
இதுகுறித்த தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்டகூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு கோபி, திருச்செந்தூர் உதவிகலெக்டர் புகாரி, சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா, உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் குறிப்பிட்ட பகுதி மக்கள் புதிய இடத்தில் சடலத்தை புதைக்க எதிர்ப்பு உள்ளதால், இப்போது அந்த சடலத்தை புதைக்க வேண்டாம் எனவும், சுடுகாட்டிற்கான உரிய அனுமதியை அரசிடம் பெற்று சடலத்தை புதைக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்று இருதரப்பினரும் கலைந்து சென்றனர். இதையடுத்து இறந்தவர் உடல் அவரது சொந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story