மின் கசிவினால் குடிசை வீடு எரிந்து சாம்பல்


மின் கசிவினால் குடிசை வீடு எரிந்து சாம்பல்
x
தினத்தந்தி 2 May 2022 9:34 PM IST (Updated: 2 May 2022 9:34 PM IST)
t-max-icont-min-icon

படவேடு அருகே மின் கசிவினால் குடிசை வீடு எரிந்து சாம்பல்

ஆரணி

படவேடு அருகே ராமநாதபுரம் கிராமத்தில் கருப்பன் என்பவரும் அவரது மனைவி காசியம்மாள் ஒரு அறையிலும், மகன் ஜெயபால், மருமகள் தரணி ,வாய் பேச முடியாத 2 குழந்தைகளுடன் மற்றொரு அறையிலும் குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். 

இந்த நிலையில் இன்று பகலில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாகவும் மின்கசிவு காரணமாகவும் திடீரென குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். 

 வீட்டில் நகை விற்று நிலம் வாங்குவதற்காக வைத்திருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரமும் மற்றும் பொருட்கள், மின் சாதனப் பொருட்கள் எரிந்து நாசமாகின.

தகவல் அறிந்ததும் கிராம நிர்வாக அலுவலர் சம்பத், படவேடு ஊராட்சி தலைவர் சீனிவாசன், துணைத்தலைவர் தாமரைச்செல்வி ஆனந்தன் ஆகியோர் சம்பந்தப்பட்ட காசியம்மாள், ஜெயபால் ஆகியோரை அழைத்து அவர்களுக்கு வேட்டி, சேலை, உணவு பொருட்கள் பிளாஸ்டிக் குடங்கள் போன்றவற்றை வழங்கினார். 

மேலும் போளூர் தாசில்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Next Story