கர்நாடகத்தில் முதல்-மந்திரி மாற்றம் நிகழும் -பிரியங்க் கார்கே எம்.எல்.ஏ. பேட்டி
பிட்காயின் வழக்கு குறித்து விசாரணை நடத்தினால் முதல்-மந்திரி மாற்றம் நிகழும் என்று பிரியங்க் கார்கே எம்.எல்.ஏ தெரிவித்துளளார்.
மைசூரு:
மைசூருவில் பிரியங்க் கார்கே எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா சட்டசபை கூட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் எந்தவொரு முறைகேடுவும் நடக்கவில்லை என்று கூறியிருந்தார். ஆனால் தற்போது சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதைபார்த்தால் அரசின் செயல்பாடுகள் சரி இல்லாமல் இருப்பது தெரிகிறது. இந்த விவகாரத்தில் பெரிய தலைகள் உள்ளது. இந்த வழக்கில் 19 பேரை மட்டும் கைது செய்துள்ளனர். 50 ஆயிரம் பேர் தேர்வு எழுதி இருக்கிறார்கள். இதில் சந்தேகம் உள்ள 300 பேரிடம் விசாரணை நடத்த வேண்டும். இந்த வழக்கில் சரியான விசாரணை நடக்கவில்லை.
அரசின் முறைகேடுகள் வெளிவராமல் இருப்பதை தடுக்க மீண்டும் மறு தேர்வு நடத்துவதற்கு அவசரப்பட்டு கொண்டிருக்கின்றனர். பிட்காயின் விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்தினால் மாநிலத்தில் முதல்-மந்திரி மாற்றம் நிகழும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story