குடியாத்தம் பகுதியில் சூறை காற்றுடன் ஆலங்கட்டி மழை
குடியாத்தம் பகுதியில் நேற்று சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் வீட்டின் கூரைகள், மின் கம்பங்கள் சேதமடைந்தன.
குடியாத்தம்
குடியாத்தம் பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் வீட்டின் கூரைகள், மின் கம்பங்கள் சேதமடைந்தன.
சூறாவளி காற்றுடன் மழை
குடியாத்தத்தை அடுத்த சேம்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட சேம்பள்ளி, ஜிட்டப்பல்லி, உப்பரபல்லி, கொட்டாரமடுகு உள்ளிட்ட கிராம பகுதிகளில் சுமார் 4 மணி முதல் 1½ மணி நேரம் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இந்த மழை காரணமாக கானாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் சேம்பள்ளி, உப்பரபல்லி, ஜிட்டப்பல்லி, கொட்டாரமடுகு பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த பல ஏக்கர் வாழை மரங்கள், பப்பாளி மரங்கள், மாமரங்கள் சாய்ந்தன. பல டன் மாங்காய்கள் உதிர்ந்து கீழே விழுந்தது. 25-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்தது.
கூரைகள் சேதம்
வீடுகளின் கூரைகள் பலத்த சேதமடைந்தது. சுமார் 1½ மணி நேரத்திற்கு மேலாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்தபோது கோலிகுண்டு அளவு ஆலங்கட்டி விழுந்தது.
சேம்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் துளசிராமுடு, ஒன்றியக்குழு உறுப்பினர் பிரகாசம், துணைத் தலைவர் சவுந்தரராஜன், ஊராட்சி மன்ற செயலாளர் கோட்டீஸ்வரன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொது மக்கள் சாலைகளில் விழுந்த மரங்களை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர்.
இந்த மழையால் பல லட்ச ரூபாய் மதிப்பிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறினர். மேலும் இப்பகுதியில் மின்தடையும் எற்பட்டது. மின்சாரம் சீராக இரண்டு நாட்கள் ஆகும் எனவும் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story