பிளஸ்-2 வினாத்தாள் அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
அரக்கோணத்தில் பிளஸ்-2 வினாத்தாள் அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அரக்கோணம்
அரக்கோணம் கல்வி மாவட்டம் அரக்கோணம் ஒன்றியத்தில் உள்ள 16 உயர்நிலை மற்றும் 15 மேல்நிலை அரசு, அரசு நிதியுதவி பள்ளிகளில் நடைபெற உள்ள 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான அரசு பொது தேர்வு வினாத்தாள்கள் அரக்கோணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ள அந்த அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வினாத்தாள் காப்பாளர்களான அரக்கோணம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை சுஜாதேவி, சித்தேரி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ரகு, உதவி தலைமை ஆசிரியர் அருட்செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story