வேப்பனப்பள்ளி அருகே திரவுபதி அம்மன் கோவில் திருவிழாவில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி


வேப்பனப்பள்ளி அருகே   திரவுபதி அம்மன் கோவில் திருவிழாவில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 2 May 2022 10:04 PM IST (Updated: 2 May 2022 10:04 PM IST)
t-max-icont-min-icon

வேப்பனப்பள்ளி அருகே திரவுபதி அம்மன் கோவில் திருவிழாவில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது.

வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி அருகே உள்ள தாசிரிபள்ளி கிராமத்தில் திரவுபதி அம்மன் மற்றும் தர்மராஜா கோவில் திருவிழா கடந்த மாதம் 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி பொங்கல் வைத்தல், பூக்கூடை எடுத்தல், தீ மிதித்தல் நிகழ்ச்சி நடந்தது. விழாவையொட்டி 18 நாட்கள் கிருஷ்ணன் பிறப்பு, அபி அம்பாள் அம்பாலிகை, பாண்டவர் பிறப்பு, வில் வளைப்பு, சுபத்திரை கல்யாணம் நாடகம், அர்ஜூனன் தபசு, அபிமன்யு சண்டை, கர்ணன் மோட்சம் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சாமி சிலைகள் அலங்கரித்து வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் துரியோதனனை படுகளம் நிகழ்ச்சி நடந்தது. அப்போது வேடம் அணிந்தவர்கள் முறம், துடைப்பத்தால்  பொதுமக்களை அடித்து ஆசீர்வதம் செய்தனர். இதை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

Next Story