மதுபாட்டில்களை மாலையாக அணிந்து இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு இந்து மக்கள் கட்சியினர் மதுபாட்டில்களை மாலையாக அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு இந்து மக்கள் கட்சியினர் சிலர் திரண்டு வந்தனர். அதில் ஒருவர் மதுபாட்டில்களை கயிற்றில் கட்டி மாலையாக அணிந்து வந்தார். பின்னர் கலெக்டர் அலுவலகம் முன்பு இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். இதில் செயற்குழு உறுப்பினர் கருப்பையா, ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது வேடசந்தூரில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். சிதம்பரம் நடராஜர் மற்றும் சிதம்பரம் ரகசியம் குறித்து இழிவாக பேசிய ‘யூடியூப்’ சேனல் நிர்வாகியை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.
பின்னர் இதுதொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியினர் மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story