உப்பள்ளியில் இருந்து மங்களூருவிற்கு விமான சேவை


உப்பள்ளியில் இருந்து மங்களூருவிற்கு விமான சேவை
x
தினத்தந்தி 2 May 2022 10:05 PM IST (Updated: 2 May 2022 10:05 PM IST)
t-max-icont-min-icon

உப்பள்ளியில் இருந்து மங்களூருவுக்கு முதன் முறையாக விமான சேவை தொடக்கப்படுகிறது


உப்பள்ளி:

துரிதமான சேவை

  தார்வார் மாவட்டம் உப்பள்ளி, கோகுல் ரோட்டில் பன்னாட்டு விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து ஐதராபாத், பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் உப்பள்ளியில் இருந்து மங்களூருவுக்கு இதுவரை விமானங்கள் இயக்கப்படாமல் இருந்தது. இதனால் உப்பள்ளி-மங்களூரு இடையே விமானங்களை இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

  இந்த நிலையில் கர்நாடகாவில் உள்ள உப்பள்ளி விமான நிலையம் முதல் மங்களூருவுக்கு விமான சேவையை தொடங்க தனியார் விமான நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி அந்த நிறுவனம் நேற்று முன்தினம் முதல் உப்பள்ளி-மங்களூரு இடையே விமான சேவையை தொடங்கி உள்ளது. இதுகுறித்து உப்பள்ளி விமான நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே விமானங்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில் உப்பள்ளியில் இருந்து மங்களூருவிற்கு தனியார் விமான நிறுவனம் விமான சேவையை தொடங்கி உள்ளது.

விமானங்கள் இயக்கம்

  அந்த வகையில் ஞாயிறு, திங்கள், புதன், வெள்ளி என வாரத்தில் 4 நாட்கள் உப்பள்ளியில் இருந்து மாலை 5.15 மணிக்கு விமானம் புறப்பட்டு மாலை 6.15 மணிக்கு மங்களூருவை சென்றடையும். அதேபோல் மறுமாக்கமாக மங்களூருவில் இருந்து மாலை 6.35 மணிக்கு புறப்பட்டு இரவு 7.40 மணிக்கு உப்பள்ளி விமான நிலையத்தை வந்தடையும்.

  இதேபோல் உப்பள்ளியில் இருந்து மைசூருவுக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளது. அதாவது உப்பள்ளியில் இருந்து வாரத்தில் செவ்வாய், வியாழன், சனி ஆகிய 3 நாட்கள் மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு மாலை 6.15 மணிக்கு மைசூருவை வந்தடையும். மறுமார்க்கமாக மைசூருவில் இருந்து மாலை 6.35 மணிக்கு புறப்பட்டு இரவு 7.40 மணிக்கு உப்பள்ளி விமான நிலையத்திற்கு வந்து சேரும்.
  இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.


Next Story