ஓசூர் வழியாக சென்னைக்கு வேனில் கடத்த முயன்ற ரூ.2¾ லட்சம் குட்கா பறிமுதல்
பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக சென்னைக்கு வேனில் கடத்த முயன்ற ரூ.2¾ லட்சம் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஓசூர்:
பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக சென்னைக்கு வேனில் கடத்த முயன்ற ரூ.2¾ லட்சம் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாகன சோதனை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வழியாக அட்கோ போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார் பேரண்டப்பள்ளி பூ மார்க்கெட் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தபோது ரூ.2 லட்சத்து 76 ஆயிரம் மதிப்பிலான 4,817 கிலோ குட்கா இருந்தது.
இதுதொடர்பாக டிரைவர் மற்றும் அவருடன் வந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பண்டாரவிளையை சேர்ந்த முத்துக்குமார் (வயது 22), கந்தசாமி (22) என்பதும், பெங்களூருவில் இருந்து சென்னைக்கு குட்கா கடத்த முயன்றதும் தெரிய வந்தது.
குட்கா பறிமுதல்
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் குட்காவுடன் வேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story