ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு


ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
x
தினத்தந்தி 2 May 2022 10:06 PM IST (Updated: 2 May 2022 10:06 PM IST)
t-max-icont-min-icon

தமிழக காவிரி நீரப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

பென்னாகரம்:-
தமிழக காவிரி நீரப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
கனமழை
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சில நாட்களாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது இதனால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்தும் குறைந்தும் காணப்படுகிறது.
இதனிடையே தமிழக நீர்பிடிப்பு பகுதிகளான ஓசூர், அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசிமணல், கேரட்டி, நாட்றாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
நீர்வரத்து அதிகரிப்பு
இந்த நிலையில் நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது. மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டியது. மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
தமிழக- கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை அளந்து கண்காணித்து வருகின்றனர்.

Next Story