தொழிலாளி தற்கொலை


தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 2 May 2022 10:06 PM IST (Updated: 2 May 2022 10:06 PM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலம் அருகே குடும்ப தகராறில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

காரிமங்கலம்:-
காரிமங்கலத்தை அடுத்த கரகப்பட்டி கிராமத்தை சேர்ந்த மாதப்பன் மகன் ரகு (வயது 30), தொழிலாளி. இவருக்கும், அவருடைய மனைவிக்கும் தகராறு இருந்து வந்தது. நேற்றும் கணவன்- மனைவி இடையே வழக்கம் போல் தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த ரகு, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ரகு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Related Tags :
Next Story