‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 2 May 2022 10:18 PM IST (Updated: 2 May 2022 10:18 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ரேஷன்கடை அவசியம்
பழனி அருகே அ.கலையம்புத்தூர் ஊராட்சி ராசாபுரத்தில் 300 குடும்பங்கள் உள்ளன. இந்த ஊரில் ரேஷன்கடை இல்லாததால், பொதுமக்கள் வேறுஊருக்கு செல்ல வேண்டியது இருக்கிறது. இதனால் பொதுமக்கள் வேலைக்கு செல்லாமல் பொருட்களை வாங்க செல்லும் நிலை உள்ளது. எனவே ராசாபுரத்தில் ரேஷன்கடை திறப்பது அவசியம். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-பாலு, ராசாபுரம்.
ரோட்டில் இறந்து கிடக்கும் நாய் 
தேனி மாவட்டம் குமணன்தொழுவில் மெயின்ரேட்டில் தெருநாய் இறந்து கிடக்கிறது. அது அழுகி துர்நாற்றம் வீசுவதால் மக்கள் நடமாட முடியவில்லை. எனவே இறந்து கிடக்கும் தெருநாயின் உடலை அப்புறப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-தவமணி, குமணன்தொழு.
குடிநீர் குழாய் உடைப்பு 
திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டியில் நத்தம் செல்லும் காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. கோபால்பட்டி பஸ்நிறுத்தம், விளக்குரோடுபகுதியில் குடிநீர் வெளியேறி வீணாக செல்கிறது. குடிநீர் வீணாவதை தடுக்க குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும். 
-சீனிவாசன், கோபால்பட்டி.
கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இரவு 8 மணிக்கு வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் வரும்போது அதிக அளவில் பயணிகள் வருகின்றனர். எனவே இரவில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து பஸ் நிலையத்துக்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். 
-கண்ணன், திண்டுக்கல்.
தூர்வாராத சாக்கடை கால்வாய் 
திண்டுக்கல் நாகல்புதூரில் இருந்து மென்டோன்சா காலனிக்கு செல்லும் தெருவில் உள்ள சாக்கடை கால்வாயில் மண், குப்பைகள் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும். 
-ராஜா, திண்டுக்கல்.

Next Story