உளுந்தூர்பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


உளுந்தூர்பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 2 May 2022 10:23 PM IST (Updated: 2 May 2022 10:23 PM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

உளுந்தூர்பேட்டை, 
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வடகுரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி மனைவி கனகவள்ளி (வயது 57). இவர் சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டி விட்டு பரிந்தல் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மறுநாள் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த கனகவள்ளி உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் நகைகள், ரூ.25 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளைபோய் இருந்தது தெரியவந்தது. கனகவள்ளி வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ரூ.1¼ லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 


Next Story