கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள்


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 2 May 2022 10:32 PM IST (Updated: 2 May 2022 10:32 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கள்ளக்குறிச்சி, 
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தை திருமணம் தடுப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை சார்பில் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவது தொடர்பாக அச்சிடப்பட்ட விழிப்புணர்வு சுவரொட்டிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர்  வெளியிட்டார். அதன்பிறகு அவர், இந்த சுவரொட்டிகளை அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொதுமக்கள் காணும் வகையில் ஒட்டி வைக்க வேண்டும் என அதிகாரிகளை அறிவுறுத்தினார். தொடர்ந்து கலெக்டர் ஸ்ரீதர் குழந்தைத் திருமணம் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கியதோடு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தைத் திருமணத்தை தடுப்பதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். முன்னதாக குழந்தை திருமணம் தடுப்பு குறித்து உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில்  மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) ராஜவேல், மாவட்ட வழங்கல் அலுவலர் ஷெர்லி ஏஞ்சலா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் செல்வி, கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் இளையராஜா உள்பட அனைத்துத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story