திருச்செங்கோட்டில் பட்டறையில் நிறுத்தியிருந்த ஆம்னி வேன் தீயில் எரிந்து சேதம்


திருச்செங்கோட்டில் பட்டறையில் நிறுத்தியிருந்த ஆம்னி வேன் தீயில் எரிந்து சேதம்
x
தினத்தந்தி 2 May 2022 10:37 PM IST (Updated: 2 May 2022 10:37 PM IST)
t-max-icont-min-icon

திருச்செங்கோட்டில் பட்டறையில் நிறுத்தியிருந்த ஆம்னி வேன் தீயில் எரிந்து சேதம்

எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு அருகே மல்லசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் குமார். இவருடைய ஆம்னி வேன் திருச்செங்கோடு குமரேசபுரத்தில் உள்ள செந்தில்குமார் என்பவரது கார் பட்டறையில் பழுது பார்ப்பதற்காக நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் ஆம்னி வேனில் வயரிங் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. 
இதனை கண்ட பட்டறை பணியாளர்கள் பெரும் விபத்தை தவிர்க்கும் வகையில் ஆம்னி ேவனை ரோட்டுக்கு தள்ளி கொண்டு வந்தனர். கியாஸ் இணைப்பில் இருந்ததால் ஆம்னி மளமளவென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் ஆம்னி வேன் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. பின்னர் தீயணைப்பு படையினர் தண்ணீரை அடித்து தீயை அணைத்தனர்.

Next Story