மே தின விழா பொதுக்கூட்டம்


மே தின விழா பொதுக்கூட்டம்
x
தினத்தந்தி 3 May 2022 12:15 AM IST (Updated: 2 May 2022 10:37 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் அ.தி.மு.க. சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் நடந்தது.

மயிலாடுதுறை:-

மயிலாடுதுறையில் அ.தி.மு.க. மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கணேஷ்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.வும், வடக்கு ஒன்றிய செயலாளருமான ராதாகிருஷ்ணன், தெற்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் செந்தமிழன் வரவேற்று பேசினார். இதில் கட்சியின் அமைப்பு செயலாளர் முருகுமாறன் கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாரதி, சக்தி, முன்னாள் மாவட்ட செயலாளர் வி.ஜி.கே.செந்தில்நாதன், மாவட்ட துணை செயலாளர் செல்லையன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் அண்ணா தொழிற்சங்க மண்டல பொருளாளர் நமச்சிவாயம் நன்றி கூறினார்.


Next Story