நாமக்கல் கோட்டை நகரவை உயர்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி


நாமக்கல் கோட்டை நகரவை உயர்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 2 May 2022 10:38 PM IST (Updated: 2 May 2022 10:38 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் கோட்டை நகரவை உயர்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

நாமக்கல்:
நாமக்கல் நகரின் மைய பகுதியில் கோட்டை அரசு நகரவை உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 1997-ம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டு வரை 6 முதல் 10-ம் வகுப்பு வரை படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் முன்னாள் மாணவர் கோபிநாத் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் 60-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்கள் கலந்துகொண்டு தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். முன்னாள் மாணவர்கள் தங்களின் ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர் லோகேஷ்வரன் நினைவாக பள்ளிக்கு ஒரு கம்ப்யூட்டர் மற்றும் பிரிண்டர் ஆகியவை பள்ளியின் பொருளாளர் ராஜன் மற்றும் பள்ளியின் தற்போதைய தலைமை ஆசிரியை மரகதம் ஆகியோரிடம் வழங்கப்பட்டது. முடிவில் முன்னாள் மாணவர் சிவக்குமார் நன்றி கூறினார்.

Next Story