பராமரிப்பு பணி காரணமாக போரிவிலி, தகிசர் பகுதிகளில் குடிநீர் வினியோகம் ரத்து


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 2 May 2022 10:44 PM IST (Updated: 2 May 2022 10:44 PM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணி காரணமாக போரிவிலி, தகிசர் பகுதிகளில் குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்பட்டது.

மும்பை, 
மும்பை மாநகராட்சி சார்பில் போரிவிலி மேற்கு ஆர் மத்திய வார்டு பகுதியில் 1500 விட்டம் கொண்ட பைப்லைன் பராமரிப்பு பணி 5-ந் தேதி (வியாழக்கிழமை) இரவு 11.55 மணி அளவில் தொடங்கி மறுநாள் காலை 11.55 மணி வரையில் நடைபெற உள்ளது. இதன் காரணமாக ஆர் மத்திய மற்றும் வடக்கு பிரிவு வார்டுகளின் பகுதியில் குடிநீர் வினியோகம் முற்றிலும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. 
இது குறித்து மாநகராட்சி விடுத்துள்ள அறிக்கையில், “குடிநீர் குழாய் பராமரிப்பு பணி காரணமாக ஆர் மத்திய வார்டு பகுதிகளான சார்க்கோப், கோராய், அக்சர், ஷிம்போலி, வசிரா, போரிவிலி மற்றும் ஆர் வடக்கு பிரிவு பகுதிகளான எல்.ஐ.சி. காலனி, தகிசர், கந்தர்பாடா ஆகிய இடங்களில் குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

Next Story