சீட்டு கட்டி ஏமாந்த பணத்தை மீட்டு கொடுத்த போலீசார்
ஆம்பூரில் சீட்டு கட்டி ஏமாந்த பணத்தை போலீசார் மீட்டு கொடுத்தனர்.
திருப்பத்தூர்
ஆம்பூரை அடுத்த கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவர் ரூ50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை பல்வேறு சீட்டு நடத்தி வந்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு உடல்நிலை சரியில்லாமல் அவர் இறந்துவிட்டார். இதனால் ராமசாமியுடன் சேர்ந்து சீட்டு நடத்திய அவருடைய மகள் சுஜாதா, மகன் குலசேகரன், மனைவி மதனம்மாள் மற்றும் சுந்தரராஜன் மகன் ரவிக்குமார் ஆகியோரிடம் பொதுமக்கள் சென்று தாங்கள் கட்டிய சீட்டு பணத்தை கேட்டு வந்தனர். ஆனால் அவர்களுக்கு சீட்டுப் பணம் தரவில்லை.
அதைத்தொடர்ந்து சீட்டு கட்டியவர்கள் வேலூர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜோதிராஜன், ராமசாமிக்கு சொந்தமான நிலம் மற்றும் வீட்டை விற்பனை செய்து பொதுமக்களுக்கு பணத்தை வழங்க உத்தரவிட்டார்.
தீர்ப்பின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், இன்ஸ்பெக்டர் அசோகன், சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், ஏட்டு சசிகுமாரி ஆகியோர் விசாரணை செய்து கொடுத்த தகவலின் அடிப்படையில் ராமசாமியின் ஒரு வீடு மற்றும் 1½ ஏக்கர் நிலத்தை மதிப்பீடு செய்து அரசின் மூலமாக விற்பனை செய்து ரூ.23 லட்சத்து 50 ஆயிரத்தை சீட்டு கட்டி ஏமாந்த பொதுமக்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதியின் முன்னிலையில் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story