‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குளம் சுத்தம் செய்யப்படுமா?
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் பரசலூர் ஊராட்சி கிள்ளிவளவன் தெரு, கலைஞர் நகர் உள்ளது. இந்த இரண்டு தெருவுக்கு மத்தியில் ஒரு குளம் உள்ளது. இந்த குளத்தில் தற்போது செடி, கொடிகள் ஏராளமாக முளைத்து புதர் போல் காட்சி அளிக்கிறது. இந்த குளத்தை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது செடி, கொடிகள் அதிகமாக படர்ந்து உள்ளதால் குளத்தின் நீரை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த குளத்தை சுத்தம் செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும.
-பொதுமக்கள், பரசலூர் ஊராட்சி.
Related Tags :
Next Story