மே தினத்தன்று விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தொழிலாளர் நலத்துறையினர் ஆய்வு 47 கடைகளுக்கு அபராதம் விதிப்பு
மே தினத்தன்று விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தொழிலாளர் நலத்துறையினர் ஆய்வு 47 கடைகளுக்கு அபராதம் விதிப்பு
விழுப்புரம்
தொழிலாளர் நலத்துறையினர் ஆய்வு
விழுப்புரம் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெய்சங்கர் தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தேசிய விடுமுறை தினமான நேற்றுமுன்தினம் மே தினத்தன்று தேசிய பண்டிகை விடுமுறை சட்டத்தின் கீழ் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மேற்கண்ட நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதா என்று 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
47 கடைகளுக்கு அபராதம்
இந்த ஆய்வின்போது கடைகள் மற்றும் நிறுவனங்களில் 24 முரண்பாடுகளும், உணவு நிறுவனங்களில் 16 முரண்பாடுகளும், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் 7 முரண்பாடுகளும் ஆக மொத்தம் 47 முரண்பாடுகள் கண்டறியப்பட்டு அந்நிறுவனங்களின் மீது இணக்க கட்டண அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
Related Tags :
Next Story