ரமலான் நோன்பு திறப்பு


ரமலான் நோன்பு திறப்பு
x
தினத்தந்தி 2 May 2022 11:28 PM IST (Updated: 2 May 2022 11:28 PM IST)
t-max-icont-min-icon

ரமலான் நோன்பு திறப்பு

சாயல்குடி
சாயல்குடி அருகே சிக்கல் கிராமத்தில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் மற்றும் மாவட்ட சிறுபான்மை பிரிவு சார்பில் ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட காங்கிரஸ் தலைவர் செல்லத்துரை அப்துல்லா தலைமை தாங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன், மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் வேல்சாமி, மாவட்ட சேவா தள தலைவர் கணேசன், கடலாடி வட்டார காங்கிரஸ் தலைவர்கள் கடலாடி தனசேகரன், கமுதி ஆதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் காங்கிரஸ் தலைவர் விக்னேஸ்வரன் வரவேற்புரை நிகழ்த்தினார். காங்கிரஸ் சார்பில் சிறுபான்மை மக்களுக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சிக்கல் ஊராட்சி துணைத் தலைவர் ஆமீன், சாயல்குடி நகரத் தலைவர் காமராஜ், பொதுச் செயலாளர்கள் போஸ், ஜெயராஜ், சாயல்குடி நகர் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்..

Next Story