சேயுமானார் கோவில் கும்பாபிஷேக விழா


சேயுமானார் கோவில் கும்பாபிஷேக விழா
x
தினத்தந்தி 2 May 2022 5:59 PM GMT (Updated: 2 May 2022 5:59 PM GMT)

திருவாடானை அருகே சேயுமானார் கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடக்கிறது.

தொண்டி
திருவாடானை அருகே சேயுமானார் கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடக்கிறது.
 கும்பாபிஷேக விழா
திருவாடானை தாலுகா ஓரியூர் கிராமத்தில் பெங்களூரு காரைக்கால் அம்மையார் அறக்கட்டளை, கோவை அறன்பணி அறக்கட்டளை மற்றும் ஓரியூர் கிராம மக்கள் சார்பில் மட்டுவார் குழலியம்மை உடனுறை சேயுமானார் கோவில் புதிதாக கட்டப்பட்டு திருப்பணி நடைபெற்றுள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா நாளை(புதன்கிழமை) காலை 9.30 மணி அளவில் நடைபெற உள்ளது. இதனையொட்டி ஓரியூர் அய்யனார் கோவிலில் இருந்து ஓரியூர் கிராமமக்கள் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பூத்தட்டு எடுத்தும், முளைப்பாரி எடுத்தும் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். 
இதைதொடர்ந்து கோவில் அருகில் அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் சென்னை ஒளியரசு சிவனடியார் தலைமையில் கோவை மணிவாசகர் அருட்பணி மன்ற செயலாளர் குமரலிங்கம் மற்றும் அருட்பணி மன்றத்தினர் சார்பில் முதற்கால யாக வேள்விகள் விநாயகர் பூஜையுடன் தொடங்கி நடைபெற்றது. 
நாளை நடக்கிறது
இதில் ஓரியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவில் இன்று இரண்டாம் கால யாக பூஜை,  மூன்றாம் கால யாக வேள்விகள் நடைபெறுகிறது. நாளை காலை நான்காம் கால யாக வேள்விகளும் நிறைவுபெற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
 இதற்கான ஏற்பாடுகளை ஓரியூர் கிராமமக்கள், இளைஞர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர். இதனையொட்டி கோவில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

Next Story