தடுப்பு கம்பிகள் இல்லாத ஆபத்தான பாலம்
கூத்தாநல்லூர் அருகே விழல்கோட்டகத்தில் தடுப்பு கம்பிகள் இல்லாத ஆபத்தான பாலத்தை அதிகாாிகள் கவனித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கூத்தாநல்லூர்,
கூத்தாநல்லூர் அருகே விழல்கோட்டகத்தில் தடுப்பு கம்பிகள் இல்லாத ஆபத்தான பாலத்தை அதிகாாிகள் கவனித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நடைபாலம்
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள, விழல்கோட்டகத்தில் அப்பகுதி மக்களின் பயன்பாட்டுக்காக வெள்ளையாற்றின் குறுக்கே 40 வருடங்களுக்கு முன்பு நடைபாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தை விழல்கோட்டகம், மண்ணுக்குமுண்டான், வெள்ளக்குடி, வாழச்சேரி, அதங்குடி, கோரையாறு, கற்கோவில், சித்தாம்பூர், பொதக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
தடுப்புக்கம்பி
மேலும், கூத்தாநல்லூர், பொதக்குடி, கொரடாச்சேரி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற மாணவர்கள் இந்த பாலத்தை கடந்து சென்று வருகின்றனர். இந்த நிலையில் பாலத்தின் முகப்பு சுவர்கள் சேதமடைந்த நிலையில், பாலத்தின் நடுவில் இரண்டு பக்கமும் அமைக்கப்பட்ட தடுப்பு கம்பிகள் இடை இடையே இல்லாமல் உள்ளது. இந்த பாலம் மிகவும் குறுகிய நடைபாலம் என்பதால் தடுப்புக்கம்பி இல்லாத பகுதியில் மாணவர்கள் தவறி ஆற்றில் விழும் வாய்ப்பு உள்ளது. இதனால் பாலத்தை கடந்து சென்று வருவதில் மிகவும் சிரமம் உள்ளது. எனவே பாலத்தில் தடுப்பு கம்பிகள் இல்லாத பகுதியில் தடுப்பு கம்பிகள் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோாிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story