ரூ.33 லட்சத்தில் புதிய துணை சுகாதார நிலையம்
நாட்டறம்பள்ளி அருகே ரூ.33 லட்சத்தில் புதிய துணை சுகாதார நிலையம் அமைக்க பூமி பூஜை நடந்தது.
ஜோலார்பேட்டை
நாட்டறம்பள்ளி ஒன்றியம் ஆத்தூர்குப்பம் ஊராட்சியில் ஜங்காலபுரம் பகுதியில் ரூ.33 லட்சம் செலவில் புதிய துணை சுகாதார நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் என். கே.ஆர்.சூரியகுமார் தலைமை தாங்கி பூமி பூஜையை தொடங்கி வைத்தார். ஆத்தூர் குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில் குமார் வரவேற்றார். பச்சூர் அரசு மருத்துவமனை வட்டார மருத்துவ அலுவலர் செல்லமுத்து, ஒன்றிய கவுன்சிலர் சாமண்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் சுதாகர், மேற்பார்வையாளர் விஜயகுமார், துணைத் தலைவர் ராஜ்குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story