முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 2 May 2022 11:58 PM IST (Updated: 2 May 2022 11:58 PM IST)
t-max-icont-min-icon

முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

நொய்யல், 
புன்னம் சத்திரம் அருகே பாலமலையிலுள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. 
இதேபோல் வேலாயுதம்பாளையம், புகழிமலையில் உள்ள பாலமுருகன் கோவிலில் கிருத்திகையையொட்டி சுவாமிக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பல்வேறு  மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு, சிறப்பு வழிபாடு நடத்தினர்.



Next Story