தே.மு.தி.க. ஆட்சிக்கு வந்தால் லஞ்சம், ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சியை பார்க்க முடியும்: பிரேமலதா விஜயகாந்த் பேச்சு


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 3 May 2022 12:04 AM IST (Updated: 3 May 2022 12:04 AM IST)
t-max-icont-min-icon

தே.மு.தி.க. ஆட்சிக்கு வந்தால் லஞ்சம், ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சியை பார்க்க முடியும் என மே தின பொதுக்கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

கரூர், 
மே தின பொதுக்கூட்டம்
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் ரவுண்டானா பகுதியில் கரூர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரவை செயலாளர் காளிராஜன் தலைமை தாங்கினார். கரூர் மாநகர் மாவட்ட செயலாளர் அரவை முத்து, கரூர் புறநகர் மாவட்ட செயலாளர் சிவம் ராஜேந்திரன், மாநில பேரவை துணைத்தலைவர் பொன்.இளங்கோவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 
தே.மு.தி.க. ஆட்சிக்கு வந்தால்..
இதில் சிறப்பு விருந்தினராக தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
தொழிலாளர்கள் நல்லா இருந்தால்தான் தொழிற்சாலைகள் நன்றாக இருக்கும். கரூர் மாவட்டத்தில் எண்ணற்ற தொழில்கள், தொழிற்சாலைகள் உள்ளன. தே.மு.தி.க. 17-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. 
ரசிகர் மன்றம் கழகமாக மாறி மக்களுக்கான இயக்கமாக நடந்து கொண்டு இருக்கிறது. 
முதலாளிகளுக்கும், தொழிலாளிகளுக்குமான வித்தியாசம் பெரிய அளவில் மாறவில்லை. பல இடங்களில் தொழிலாளர்கள் வஞ்சிக்கப்பட கூடியவர்களாகத்தான் இருக்கிறார்கள். தே.மு.தி.க. ஆட்சிக்கு வந்தால் மட்டுமே லஞ்சம், ஊழல் இல்லாத ஒரு நேர்மையான ஆட்சியை தமிழக மக்கள் பார்க்க முடியும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். 
விஜயகாந்த் தமிழ்நாட்டை மாற்றி இருப்பாார்
விஜயகாந்த் தற்போது நலமுடன் இருந்தால் அவர்தான் முதல்வர் என்று சொல்கிறீர்கள். உண்மையில் அந்த வார்த்தை எனக்கு மிக மிக வேதனையாக இருக்கிறது. உங்களிடம் ஒரு வாய்ப்பு கொடுங்கள் என் தமிழகத்தை தங்க தட்டில் வைத்து தாலாட்டுகிறேன் என கூறினார். 
கண்டிப்பாக அவர் தமிழ்நாட்டை மாற்றி காட்டியிருப்பார். இதனால் அந்த வாய்ப்பை நழுவ விட்டது விஜயகாந்த் இல்லை. தமிழக மக்களாகிய நீங்கள்தான் என மன வேதனையுடன் தெரிவிக்கிறேன். 
சொத்துவரி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சுங்கசாவடி விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட அனைத்து விலையும் உயர்ந்துள்ளது.டி.என்.பி.எல்.லில் தொழிலாளர்களின் கோரிக்கையை அரசாங்கத்திற்கு கொண்டு சேர்ப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
இந்த பொதுக்கூட்டத்தில் கரூர் மாவட்ட அவைத்தலைவர் முருகன் சுப்பையா, கரூர் மாநகர் மாவட்ட பொருளாளர் கலையரசன், கரூர் மாநகர் மாவட்ட துணை செயலாளர் அனிதா ஆனந்த், தலைமை செயற்குழு உறுப்பினர் பெரியண்ணன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணி, கேப்டன் மன்ற செயலாளர் ராஜா, மாவட்ட பொருளாளர் கதிர்வேல், மாவட்ட துணை செயலாளர்கள் சுப்பிரமணி, சுரேஷ், ராஜலெட்சுமி மருதையா, ஜோதிமுருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



Next Story