இரு தரப்பினர் மோதல் ஒருவர் கைது
வலங்கைமான் அருகே இரு தரப்பினர் மோதலில் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
வலங்கைமான்;
வலங்கைமான் அருகே உள்ள ஏரி வேலூர் ஊராட்சி வேலாக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி(வயது45). இவருடைய மகன் சிபிராஜ்(18). இவர் அப்பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அதே கிராமம் குடியான தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் நீலமேகம் என்பவர் மோட்டார் சைக்கிள் உரசியபடி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்த சிபிராஜ் தனது தந்தை கலியமூர்த்தியிடம் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து சிபிராஜ் குடும்பத்தினருடன் சென்று நீலமேகத்திடம் கேட்டுள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவைர ஒருவர் தாக்கி கொண்டனர். தாக்குதலில் கலியமூர்த்தி, சிபிராஜ் ஆகியோர் லேசான காயங்களுடன் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிபிராஜ் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக வேலாக்குடி குடியான தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் நீலமேகம்(24) கவியரசன்(35), செல்வராஜ்(60) செல்லதுரை(60), சூர்யா(25), ஆகாஷ் (25) உள்ளிட்ட 6 பேர் மீது வலங்கைமான் போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனா். மேலும் நீலமேகத்தை கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தலைமறைவாக உள்ள மற்ற 5 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story