காரையூர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ேஜாடி தஞ்சம்


காரையூர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ேஜாடி தஞ்சம்
x
தினத்தந்தி 3 May 2022 12:21 AM IST (Updated: 3 May 2022 12:21 AM IST)
t-max-icont-min-icon

பாதுகாப்பு கேட்டு காதல் ேஜாடி தஞ்சம் அடைந்தனர்.

காரையூர்:
காரையூர் அருகே சூரப்பட்டி கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகன் ராஜசேகர் (வயது 25). இவர் கோவையில் உள்ள பேக்கரியில் வேலைபார்த்து வருகிறார். இவரும் பொன்னமராவதி பெரியார் நகரை சேர்ந்த சிவராமன் மகள் தனலட்சுமி (20) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். மேலும் இவர்களது திருமணத்திற்கு பெண்ணின் வீட்டில் சம்மதம் இல்லை. இந்நிலையில், சூரப்பட்டி பிள்ளையார் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து 2 பேரும் பாதுகாப்பு கேட்டு காரையூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். 

Next Story