நெல்லையில் பொதுமக்கள் ‘திடீர்’ சாலை மறியல்


நெல்லையில் பொதுமக்கள் ‘திடீர்’ சாலை மறியல்
x
தினத்தந்தி 3 May 2022 12:32 AM IST (Updated: 3 May 2022 12:32 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் பொதுமக்கள் ‘திடீர்’ சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை:
நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள பேராச்சி அம்மன் கோவிலில் கொடை விழா நடந்து வருகிறது. இதையொட்டி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இளங்கோ நகர் உள்ளிட்ட பகுதிகளில் டிஜிட்டல் போர்டு வைத்திருந்தனர். இதை போலீசார் அகற்ற கூறினார்கள். சில இடங்களில் அதை அகற்றி விட்டனர். டிஜிட்டல் பேனர் அகற்றப்பட்டதை கண்டித்து இளங்கோநகர், வண்ணார்பேட்டை பகுதி ஊர் பொதுமக்கள் நேற்று இரவு நெல்லை வண்ணார்பேட்டை புறவழிச்சாலையில் ஊர் நிர்வாகிகள் சாலைகுமார், செல்லையா, கணேசன், காளி சரவணன் ஆகியோர் தலைமையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருப்பதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் புறவழிச்சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story